%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
Thursday, 09 April 2015 - 9:53
நாகூர் ஹனீபா காலமானார்
14,255

Views

பிரபல இஸ்லாமிய கலாசார பாடகர் நாகூர் ஈ.எம்.ஹனீபா காலமானார். 

சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்று மாலை அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



காலமாகும் போது அவருக்கு 97 வயது.

   

அவர் இஸ்லாமிய கலாசார பாடல்களையும், திரைப்படப் பாடல்களையும் பாடியுள்ளார்.

சிறந்த குரல் வளத்தைக் கொண்ட அவரின் பாடல்கள் இஸ்லாமிய மதத்தவர்களையும் தாண்டி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பிரபலமடைந்திருந்தன.



1990ம் ஆண்டுகளில் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட மன்ற உறுப்பினராகவும் செயற்பட்டிருந்தார்.



அந்தகாலப்பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கூட்டங்கள் அவரின்பாடலுடனேயே ஆரம்பமாக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE