%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+
Thursday, 09 April 2015 - 12:55
அவமானப்பட்ட ஸ்ருதி
1,171

Shares
140,606

Views

நடிகை ஸ்ருதிஹாசனைப் பற்றி அடிக்கடி ஏதாவது பரபரப்பான செய்தி வந்து கொண்டுதான் இருக்கின்றது.

கடந்த வாரங்களில் தயாரிப்பு நிறுவனத்துடன் மோதிய சம்பவம் வழக்கு வரை சென்றது. தற்போது ஆந்திர அமைச்சர் ஒருவர் ஸ்ருதிஹாசனை அழ வைத்த சம்பவம் பற்றி பரபரப்பாகப் பேசப்படுகிறது

சில நாட்களுக்கு முன் ஐதராபாத்திலிருந்து திருப்பதி செல்லும் விமானத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. விமானம் புறப்பாடு பற்றிய அறிவிப்பை விமானி அறிவித்த பின்னும் அந்த ஆந்திர அமைச்சர் அவருடைய கையடக்கத்தொலைபேசியில் சத்தமாக பேசிக் கொண்டேயிருந்தாராம்.

விமானத்தில் பயணித்த மற்றவர்களைப் பற்றி அவர் கவலைப்படவேயில்லையாம். ஸ்ருதிஹாசனும் அவரிடம் கையடக்கத் தொலைபேசியில் உரையாடுவதை நிறுத்தும் படி கேட்டுள்ளார்.

ஆனால் அவர் யார் சொல்வதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லையாம். அதைத் தொடர்ந்து இருவருக்குமிடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது அமைச்சர் சில கடுமையான வார்த்தைகளைப் பேசியதாகவும், அதனால் ஸ்ருதிஹாசன் அதிர்ச்சியடைந்து அழ ஆரம்பித்ததாகவும் சொல்கிறார்கள்.  

இதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானாராம் ஸ்ருதி ஹாசன். பொது இட த்தில் நடைபெற்ற இச்சம்பவம் அவரை பெரிதும் கவலை கொள்ளச் செய்துவிட்டதாம்.

அதன் பின் விமானப் பணிப் பெண்அமைச்சரிடமும்,ஸ்ருதியிடமும் பேசி நிலைமையை சரி செய்தார் என்கிறார்கள். இந்த விவகாரம் பற்றி தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

நன்றி- இணையம்

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE