%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88
Monday, 13 April 2015 - 15:34
மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை
20,696

Views

ரியாசென்னின் மும்பை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

முன்னாள் இந்திப்பட நடிகை மூன்மூன் சென். இவரது மகள் ரியாசென். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

ஆனால், தமிழில் தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. தற்போது இந்தியில் நடித்து வருகிறார்.

ரியாசென் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாய் மூன்மூன்சென்னுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு தனது தாயுடன் ரீமாசென் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென அவர்களது வீட்டில் தீப்பிடித்துள்ளது. கட்டில், மெத்தை, என அனைத்தும் தீயில் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து நித்திரையில் இருந்து எழுந்த ரியாசென்னும், அவரது தாயும் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து உயிர் தப்பினர். தீ விபத்து குறித்து தீயணைப்பு படைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE