கார் விபத்தில் நடிகை படுகாயம்: குழந்தை பலி

Friday, 03 July 2015 - 12:12

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+

பிரபல ஹிந்தி நடிகை ஹேமா மாலினி சென்ற கார் நேற்று இரவு ஜெய்ப்பூருக்கு அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் நடிகை ஹேமமாலினி படுகாயம் அடைந்துள்ளார். மேலும் இவ்விபத்தில்ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

பிரபல ஹிந்தி நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான ஹேமா மாலினி, நேற்றிரவு தனது தொகுதியான மதுராவில் இருந்து ஜெய்ப்பூருக்கு காரில் பயணித்துள்ளார். அவர் பயணித்தஅதி சொகுசு கார், இரவு 8.50 மணியளவில் ஜெய்ப்பூரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள தெளஸா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி, எதிரே வந்த கார் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில், ஹேமா மாலினியின் நெற்றி மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் உடனடியாக ஜெய்ப்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்,  மற்றைய காரில் வந்த 4 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அந்த காரில் பயணித்த 4 பேரும் படுகாயத்துடன் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
    








Exclusive Clips