பாகிஸ்தானில் குடியேறப்போகிறாரா ஷாருக்கான்?

Wednesday, 04 November 2015 - 16:32

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%3F

இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக நடிகர் ஷாருக்கான் கருத்து தெரிவித்திருந்தார். ஷாருக்கின் கருத்தையடுத்து இந்துத்துவ அமைப்புகள் அவர் மீது பாயத் தொடங்கின.

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சாத்வி பிராச்சி, இஸ்லாமியர்கள் இந்தியாவில்தான் வசிக்கின்றனர்; ஆனால் அவர்கள் ஆத்மா பாகிஸ்தானுக்காக வாழ்கிறது என்றும்,  ஷாருக்கானை பாகிஸ்தானின் முகவர் எனவும் கடுமையாக சாடியிருந்தார்.

இதற்கிடையே, நடிகர் ஷாருக்கான் பாகிஸ்தானில் வந்து குடியேறுமாறு 1993-ம் ஆண்டு மும்பை தொடர் வெடிகுண்டு வெடிப்பின் காரண கர்த்தாவாக செயல்படும் ஜமா உத் தவா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் மொஹமட் சயிட் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து ஹபீஸ் தனது ட்விட்டர் தளத்தில், '' எந்த முஸ்லிமும், ஷாருக்கான் உள்பட அனைவரும் இந்தியாவில் வாழ்வதில் கடினத்தை உணர்ந்தால், இனப்பாகுபாடு இருப்பதாக கருதினால், இஸ்லாமின் பேரில் பாகிஸ்தானில்  குடியேற அழைக்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், '' இந்திய பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. இந்தியா மதசார்பின்மை கொண்ட  நாடு என்ற அடையாளத்தை இழந்து இந்து தேசமாக மாறி வருகிறது'' என்றும் ஹபீஸ் சயிட் அதில் தெரிவித்துள்ளார்.








Exclusive Clips