ஹீரோவா வந்தாலும் நடிப்பேன், காமெடியனாகவும் நடிப்பேன்: வடிவேலு

Monday, 02 May 2016 - 18:14

%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%2C+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%3A+%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81
விஷால்-தமன்னா நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படம் ‘கத்திச்சண்டை’. இப்படத்தை சுராஜ் இயக்கவிருக்கிறார்.

இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் இப்படத்தை தயாரிக்கிறார்.

சமீபகாலமாக கதாநாயகன் வேடத்தில் மட்டுமே நடித்துவந்த வடிவேலு, இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

இவருடன் சூரியும் சேர்ந்து காமெடியில் கலக்கவிருக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் நடந்தது.

இதில் கலந்துகொண்ட வடிவேலுவிடம் மீண்டும் காமெடி வேடத்தில் நடிப்பது குறித்து கேட்டபோது, இனி எனக்கு ரெண்டு டிராக்தான். ஹீரோவா வந்தாலும் நடிப்பேன், காமெடியனாகவும் நடிப்பேன். இனி நிறைய படங்களில் படம் முழுவதும் வருவது மாதிரி காமெடி வேடத்தில் நடிக்க உள்ளேன்.

சுராஜ் எனக்கு ஏற்ற மாதிரி தீனி போடுவார். அதனால் நம்பிக்கையோடு நடிக்கிறேன். இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெரும் என்றார்.

இந்தவிழாவில் நடிகர் விஷால், பொன்வண்ணன், சூரி, வடிவேலு, இயக்குனர்கள் சுராஜ், பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ‘கத்திச் சண்டை’ படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்







Exclusive Clips