திடீரென பற்றி எரிந்த கார் - உயிர் தப்பிய நடிகர்

Tuesday, 23 August 2016 - 17:21

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
‘சுந்தரபாண்டியன்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜிகர்தண்டா’, ‘தெறி’ உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் சவுந்தரராஜா.

இவர் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘தர்மதுரை’ படத்தில் அவருக்கு தம்பியாக நடித்திருந்தார். ‘தர்மதுரை’ படத்தில் இவருடைய நடிப்பும் பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில், சவுந்தரராஜா தனது அம்மா, அண்ணன் உட்பட தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் சென்றிருந்தார்.

கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு ஊருக்கு திரும்பி வரும் வழியில் கோவில்பட்டி அருகே அவர்கள் பயணித்த கார் என்ஜினில் இருந்து திடீரென்று புகை வந்துள்ளது. 

உடனே, காரை நிறுத்திவிட்டு என்னவென்று பார்ப்பதற்குள் கார் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. அப்போது, காரின் உள்ளே இருந்தவர்கள் அனைவரும் பதறியடித்துக் கொண்டு இறங்கினார்கள். இதனால், சவுந்தரராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

ஆனால், அவர்கள் சென்ற ஸ்கார்பியோ கார் முழுவதும் எரிந்து நாசமானது.







Exclusive Clips