கடைசியில் இப்படியாகிப் போச்சே அமலா பாலுக்கு

Wednesday, 24 August 2016 - 15:19

%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த அமலா பால் , அவரது இயக்குனர் கணவர் விஜயும் பரஸ்பரம் பிரிவது என்று முடிவு செய்து, விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இருவருக்குள்ளும் பிரிவு ஏற்பட என்ன காரணம் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

திருமண வாழ்க்கைக்கு அடிப்படையான நேர்மையும், நம்பிக்கையும் இல்லாமல் போனதாலேயே இந்த பிரிவு என்று இயக்குனர் கூறியதை நடிகை மறுக்கவில்லை. தனது தரப்பு விளக்கம் எதையும் அவர் அளிக்கவுமில்லை. 

காரணம் எதுவாக இருப்பினும் விவாகரத்து முடிவு இருவரின் தனிப்பட்ட விஷயம். ஆனால், இதனை காரணமாக வைத்து நடிகையை தமிழில் ஒதுக்குவதாக ஒரு நம்பத்தகுந்த செய்தி உலவுகிறது.

இயக்குனர் விஜய் தமிழில் பிரபலமானவர். அவரது தந்தையும் பிரபலமான தயாரிப்பாளர்.

நடிகையை தங்கள் படத்தில் ஒப்பந்தம் செய்தால் இவர்கள் இருவரின் மனம் புண்படுமோ, விரோதியாகிவிடுவோமோ என்ற அச்சத்தில் நடிகையை புறக்கணிக்கின்றனர். ஆனால், இயக்குனருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ அமலா பால்தானாம்..








Exclusive Clips