பிரபல நடிகரை ரகசியமாக நிச்சயம் செய்துகொண்ட தீபிகா படுகோன்!

Saturday, 26 November 2016 - 17:37

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%21+

நடிகை தீபிகா படுகோன் ஹிந்தியில் கடைசியாக நடித்த அனைத்து படங்களுமே ப்ளாக் பஸ்டர் பட்டியலில் இணைந்தவை.

தற்போது இவர் ஒரு படத்துக்கு ரூ. 15 கோடியை சம்பளமாக பெறுகிறார்.

மேலும் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகளின் பட்டியலில் இவர் பத்தாவது இடத்தைப் பிடித்து அசத்தியிருந்தார்.

ஆனால் இவரது தனிப்பட்ட வாழ்க்கை மட்டும் அவ்வப்போது ஊடகங்களில் அடிபட்டுக்கொண்டே இருக்கும்.

இவரும் பிரபல பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான்.

ஆனால் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இவர்கள் இருவரும் ரகசியமாக நிச்சயம் செய்துக் கொண்டுள்ளார்களாம்.

பொலிவுட் ஊடகமொன்று இதை பரபரப்பாக பேசி வருகிறது.








Exclusive Clips