+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%21
Wednesday, 19 July 2017 - 8:48
பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!
54,729

Views
பிரபல நடிகை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை பிடிஷா பெஸ்பரூபா (30). பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், ஜக்கா ஜசோஸ் என்ற ஹிந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அண்மையில் மும்பையிலிருந்து டெல்லியின் குர்கான் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.

இந்நிலையில், பிடிஷாவின் தந்தை கடந்த திங்களன்று அவருக்கு அலைபேசி அழைப்பு எடுத்துள்ளார்.

ஆனால், மறுமுனையில் பதிலில்லை. பல முறை முயற்சித்தும் பலனில்லை. இதன் காரணமாக ஏதோ நடத்திருக்கிறது என்ற பயத்தில் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இது தொடர்பாக கூறியுள்ளார்.

அவரிடம் பிடிஷா இருக்கும் முகவரியை பெற்றுக்கொண்டு, கடந்த திங்களன்று குர்கானில் உள்ள அவரது வீட்டிற்கு காவல்துறையினல் சென்றனர்.

அங்கு கதவு பூட்டியிருந்தது. அதன் பின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது பிடிஷா, தூக்கில் பிணமாக இருந்துள்ளார்.

இதன் காரணமாக, அவரது தந்தை தனது மகள் தற்கொலை செய்திருக்க மாட்டாள் என்று கூறியிருக்கிறார். மேலும், அவரது தற்கொலை குறித்து புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் பிடிஷாவின் அலைபேசி, ஃபேஸ்புக் உள்பட சமூக வலைதளங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தேவைப்பட்டால் பிடிஷாவின் கணவரை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE