உயிருக்கு போராடும் பிரபல நகைச்சுவை நடிகர்!

Thursday, 17 August 2017 - 9:30

%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%21

வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவையில் கலக்கிய நடிகர் அல்வா வாசுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

900 படங்களுக்கு மேல் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் வாசு. கல்லீரல் பாதிப்பின் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவருக்கு அளித்து வந்த சிகிச்சை பலனளிக்காததால் விரைவில் உயிர் பிரிந்துவிடும் என மருத்துவர்கள் கூறினர்.

இதுகுறித்து அவர்கள் குடும்பத்தார் பேசுகையில், கடந்த ஓராண்டாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் டயாலிசிஸ் செய்தோம்.

கல்லீரல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் கால்கள் மற்றும் வயிறு வீங்கியுள்ளது, மூச்சு விடவும் சிரமப்படுகிறார்.

தற்போது வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டோம், கவனமுடன் பார்த்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் தகவலை கேள்விப்பட்டு பொன்வண்ணன், சத்யராஜ் உட்பட பலரும் பேசியதாகவும், தங்களால் முடிந்த உதவிகளை செய்வதாகவும் கூறியதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நடிகர் சங்க துணைத்தலைவர் பொன்வண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், 500 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகர் அல்வா வாசு.

இயக்குநர் மணிவண்ணன் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனாரான அந்த பொறுப்பு கிடைக்காமல் நடிகராகவே பயணித்து பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

பெரிய அளவில் அவர் சம்பாதிக்கவே இல்லை. ரொம்ப எளிமையான இயல்பான ஒரு மனிதர். முகம் சுளிக்குமாறு எதுவும் பேசமாட்டார். வாய்ப்புக்காக எதுவும் பேசமாட்டார்.

தனக்கு கிடைத்த வாய்ப்பில் தனக்காக ஒரு சின்ன குடும்பத்தில் ஒரு சூழ்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஆறு மாதமாக அலைந்து கொண்டிருந்தார். மிக சிரமமான காலகட்டத்தில் சென்னையில் வந்து இருக்கவே முடியாத ஒரு சூழ்நிலையில் அவர் சொந்த ஊரான மதுரைக்கே சென்றுவிட்டார்.

அவருடைய துணைவியார்தான் மிகவும் கஷ்டப்பட்டு அவரை கவனித்து வந்தார். கடந்த மூன்று மாதமாக அவரது உடல்நிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வந்தது. ஒரு நல்ல சூழ்நிலைக்கு வந்துவிடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போதே மருத்துவத்தை அவர் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை.

மனிதர்களுடைய வாழ்கையில் கடைசி நம்பிக்கை என்று சொல்லக்கூடிய விஷயங்கள் இரண்டு உள்ளன. ஒன்று மருத்துவம், மற்றொன்று கடவுள் நம்பிக்கை. அதில் முதலாவது கைவிட்டுவிட்டது. மற்றொன்றான கடவுள் நம்பிக்கை நிச்சயம் காப்பாற்றும் என நாம் நம்பலாம்.

இப்போது நாம் செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு கலைஞன் சினிமாவை நம்பி வந்தான். நல்ல மனிதனாக வாழ்ந்தான். அவருடைய கடைசி காலத்தில் அவர் கண்முன்னாடியே அவர் குடும்பத்துக்கு பொருளாதார உதவி கிடைத்துவிட்டால் அவருடைய கடைசி காலம் மிக நிம்மதியாக இருக்கும்.

ஒரு வேளை அந்த நம்பிக்கையே கூட அவரை காப்பாற்றி விடும். அதனால் தயவு செய்து தங்களால் எவ்வளவு முடியுமோ அதை எங்கள் எங்களுடைய பிஆர்ஓ ஜான்சனிடம் கேட்டால் அவருடைய வங்கி கணக்கு முதலிய தகவல்களை தருவார்.

தங்களால் முடிந்ததை எவ்வளவு சீக்கிரம் தரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுத்து உதவுங்கள். நன்றி என கூறப்பட்டுள்ளது.








Exclusive Clips