%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D..%21+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
Wednesday, 13 September 2017 - 18:57
இறுதிக்கட்டத்தை நெருங்கும் பிக்பாஸ்..! போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி
2,104

Views

கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இனி வரும் நாட்களில் கடுமையான டாஸ்குகள் இருக்கும் என ஹவுஸ்மேட்களிடம் அறிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் கடந்த இரு நாட்களாக அனைவருக்கும் மிக கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில், நேற்றைய (செவ்வாய்க்கிழமை) நிகழ்ச்சியில் கர்சிப் அளிவிலான துணிகள் பந்து போல் உருட்டி எறியப்பட்டது. ஹவுஸ்மேட்கள் அனைவரும் அதை சேகரித்து வைத்து டபுள் பெட்ஷீட் உருவாக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. 

துணி பந்துகள் சில நிமிடங்களே எறியப்பட்ட நிலையில், தங்களுக்கு வேண்டிய அளவிலான துணிகளை எடுத்துக்கொள்வதற்கு ஹவுஸ்மேட்களிடையே பெரும் போட்டியே நிலவியது.

இதில் சிநேகன் துணியை பிடிப்பதற்கு நீச்சல் குளத்துக்குள் குதிக்க, கணேஷ் கீழே தடுக்கி விழுந்து எழுந்திருக்க என பெரிய களோபரங்களை நிகழ்ந்தன.

இதனைத் தொடர்ந்து மற்றொரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் பழைய காலத்து கார் ஒன்று வரவழைக்கப்பட்டு அதில் ஹவுஸ்மேட்கள் அனைவரும் அமர வேண்டும் எனக் கூறப்பட்டது. 

யார் கடைசி வரை அமர்ந்திருக்கிறாரோ அவருக்கு கமல்ஹாசன் கோல்டன் டிக்கெட் ஒன்றை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு கூடுதலாக 10 பாயிண்டுகளும் கொடுக்கப்பட உள்ளது.

இந்த கோல்டன் டிக்கெட்டை பெற்றால் பைனலுக்கு நேரடியாக செல்லலாம் எனவும், நாமினேஷனிலிருந்து விடுபடலாம் எனவும் கமல்ஹாசன் ஏற்கனேவே தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து இந்தத் டிக்கெட்டை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்கிற முனைப்பு ஹவுஸ்மேட்கள் எல்லோருக்கும் ஏற்பட்டது. 5 பேர் மட்டும் அமரக்கூடிய காரில் 7 பேர் நெருக்கமாக அமர்ந்திருந்தனர். நேரம் செல்ல செல்ல ஒவ்வொருவராக தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறினர்.

இறுதியாக சிநேகன், சுஜா ஆகியோர் மட்டும் வெளியேறாமல் காரிலேயே அமர்ந்திருந்தனர். இரவு நேரம் 3 மணி ஆகியும், இருவரும் தூங்காமல் விழித்து கொண்டிருந்தனர். ஒருவருக்கு போட்டியாக மற்றொருவர் நினைத்துக்கொண்டதால் விட்டுக்கொடுக்காமல் போட்டியை தொடர்கின்றனர்.

இந்த நிலையில், நிகழ்ச்சியின் முடிவில் வெளியிடப்பட்ட புரமோவில் இருவரும் இன்றும் (புதன்கிழமை) மாலை வரை அதே காரினுள் அமர்ந்து இருப்பது போன்று காட்டியுள்ளனர். 

பிக்பாஸ் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக அமைந்துள்ள கோல்டன் டிக்கெட்டை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்று சிநேகன், சுஜா கடுமையாக போராடி வருகின்றனர். எனவே இன்றைய நிகழ்ச்சியில் இந்த டாஸ்கின் வெற்றியாளர் யார் எனத் தெரிவரும்.  
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE