%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%21%21
Saturday, 04 November 2017 - 9:58
அமலாபாலிடம் சந்தர்பம் பார்த்து காதலை கூறிய பிரபல நடிகர்!!
10,762

Views
நடிகை அமலாபால் புதுச்சேரி முகவரியில் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்ட நிலையில் அமலாபால் கார் வாங்கியதில் எந்தவித முறைகேடும் இல்லை என்று புதுச்சேரி அமைச்சர் கூறி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் நடிகை அமலாபால் படகில் நாய்க்குட்டியுடன் செல்வது போன்ற புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து நகர வாழ்க்கையில் இருந்தும் சர்ச்சைகளிடம் இருந்தும் வெளி வர விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார்.

அமலாபாலின் இந்த பதிவு குறித்து கமெண்ட் செய்த நடிகர் ஆர்யா, ‘சாலை வரியை மிச்சப்படுத்த நீங்கள் படகு சவாரியை செய்கிறீர்கள் என்று நினைக்கின்றேன்’ என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த அமலாபால், ‘நீங்களும் தான் சைக்கிளில் சென்று வரியை மிச்சப்படுத்துகிறீர்கள்’ என்று பதிலளித்தார்

இதற்கு பதிலளித்த ஆர்யா, ‘நான் உங்களுக்காகவும், காதலுக்காகவும்தான் சேமித்து வைக்கின்றேன் என்று சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது காதலை கூறியுள்ளார்.

இதற்கு அமலாபால் ‘கிண்டல்’ போதும் என்று முடித்துள்ளார்.

இந்த உரையாடல் ஒரு நகைச்சுவைக்காக என்று எடுத்து கொண்டாலும் இருவருக்கும் இடையே உண்மையான காதல் தோன்றுமா? என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஏற்கனவே இருவரும் ‘வேட்டை’ படத்தில் காதலர்களாக நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for amala paul and arya


Image result for amala paul and arya
Related image
Image result for amala paul and arya
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE