%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D
Monday, 04 December 2017 - 11:45
முழு நீள தமிழ் படத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்
1,378

Views
கனடா நாட்டைச் சேர்ந்தவரான சன்னி லியோன். இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்.

உலகின் டொப் டென் நீலப்பட நடிகைகளில் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவுக்கு வந்தவர்.

அதன் பிறகு இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தென்னிந்திய படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.

தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார். தற்போது தமிழ் படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தை சாமிடா, சவுகார்பேட்டை, தம்பி வெட்டோத்தி சுந்தரம், பொட்டு படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.

ஸ்டீவ்ஸ் கார்னர் என்ற நிறுவனத்தின் சார்பில் பொன்ஸ் ஸ்டீபன் தயாரிக்கிறார். இதுகுறித்து இயக்குனர் வடிவுடையான் கூறியதாவது:

மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய கலாச்சாரங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாகும்.

இந்த சரித்திர படத்தில் நடிக்க கத்திசண்டை, குதிரையேற்றம் மற்றும் மற்ற சண்டைக் கலைகளையும் கற்று வருகிறார் சன்னி லியோன்.

இதற்காகவே ஆந்திராவில் இருந்து ஒரு சிறப்பு பயிற்சியாளர் மும்பைக்கு போய் சன்னி லியோனுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இந்த பிரமாண்ட படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தில் 70 நிமிட காட்சிகளில் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது .

பாகுபலி, 2.0 படங்களில் பணி புரிந்த கம்பெனிகளை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும். என்கிறார் வடிவுடையான்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE