%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88..+%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%21%21
Tuesday, 05 December 2017 - 11:51
அது உண்மையில்லை.. ஓவியா தொடர்பான ஆதாரம் சிக்கியது!!
1,624

Views
காஞ்சனா 3’யில் இருந்து நடிகை ஓவியா விலகவில்லை என்று படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘களவாணி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஓவியா.

அதன்பின் பல படங்களில் நடித்தும் அவருக்கு சரியான இடம் கிடைக்கவில்லை. சமீபத்தில் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.

இதுவரை சினிமாவில் கிடைக்காத பெயர், புகழ், இந்த நிகழ்ச்சி மூலம் ஓவியாவுக்கு கிடைத்தது. அதோடு, நிறைய பட வாய்ப்புகளும் வர தொடங்கி உள்ளன.

தற்போது, ராகவா லாரன்ஸ் இயக்கும் ‘காஞ்சனா 3’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திலிருந்து ஓவியா விலகிவிட்டதாகவும், அதனால் அவர் மீது நவடிக்கை கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இதை ‘காஞ்சனா 3’ படக்குழு மறுத்துள்ளது.

ஓவியா, ‘காஞ்சனா 3’ படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார் என்ற தகவலை வெளியிட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE