%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21
Thursday, 07 December 2017 - 11:11
நடிகர் சசி கபூரின் உடல் அரச மரியாதையுடன் தகனம்!
119

Shares
14,305

Views
பிரபல பாலிவுட் நடிகர் சசி கபூரின் உடல் மகாராஷ்டிர அரசின் மரியாதையுடன் நேற்று மும்பை சான்ட்டாகுருஸ் பகுதியில் தகனம் செய்யப்பட்டது.

8-3-1938 அன்று கொல்கத்தா நகரில் பிறந்த சசி கபூர், புகழ்பெற்ற பாலிவுட் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார்.

ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நாடகங்களிலும், புராணப் படங்களில் நடிக்க தொடங்கிய சசிகபூர் படிப்படியாக முன்னேறி இந்திப் பட கதாநாயகனாகவும், இணை நாயகனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் சுமார் 175 படங்களில் நடித்துள்ளார்.


பாலிவுட் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல்முனைகளில் பணியாற்றியவர் சசி கபூர்.  

இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டுதாதா சாஹேப் பால்கே விருதை இந்திய அரசு வழங்கியது. இந்திய சினிமாவின் வளர்ச்சியில் இவர் ஆற்றிய பங்களிப்புக்காக இவ்விருது வழங்கப்பட்டது.

முன்னதாக 2011-ல் பத்மபூஷன் விருதினை அரசு வழங்கி பெருமைபடுத்தியது. மூன்று முறை தேசிய விருதினையும், பல ஃபிலிம் பேர் விருதினையும் பெற்றவர். நூற்றுக்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் நடித்தவர் சசி கபூர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சசி கபூர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் நெஞ்சு எரிச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

சிகிச்சை பலனின்றி நேற்று மாலை தனது 79-வது வயதில் அவர் காலமானார். 

அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.


      
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE