பொங்கல் போட்டிக்கு சூப்பர் ஸ்டாருடன் களமிறங்கும் தளபதி விஜய்!!

Monday, 11 December 2017 - 11:46

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%21%21
தமிழ் சினிமாவில் சாதனை மன்னர்களாக விளங்கி வருபவர்கள் சூப்பர் ஸ்டார், தளபதி விஜய், தல அஜித் போன்றவர்கள். இவர்களின் படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மாஸான வரவேற்பு இருக்கும்.

இந்நிலையில் 2018-ம் ஆண்டு பொங்கலுக்கு சூப்பர் ஸ்டாருக்கும், தளபதி விஜய்க்கும் கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, காரணம் என்னவென்றால் சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தை வரும் பொங்கல் அன்று சன் டிவியில் ஒளிபரப்ப அந்த தொலைக்காட்சி முடிவு செய்துள்ளதாம்.

அதே போல் மெர்சல் படத்தை வாங்கியுள்ள ஜி.தமிழ் பொங்கலுக்கு மெர்சல் படத்தை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளதாம், இதனால் இந்த இரண்டு தொலைக்காட்சிகளுக்கு இடையே டி.ஆர்.பி-யில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி சூப்பர் ஸ்டாருக்கா? தளபதிக்கா? என்பதை பொங்கல் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.








Exclusive Clips