பிரபல நடிகை திடீர் மரணம்..!! காரணம் இதுவா..?

Sunday, 25 February 2018 - 9:45

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D..%21%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE..%3F
பிரபல தமிழ் திரைப்பட நடிகை ஸ்ரீதேவி காலமானார்.

அவர் டுபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக இந்திய முன்னணி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

டுபாயில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நேற்று இரவு 11 மணியளவில் மரணமடைந்ததாக அவரது உறவினர்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியிடப்படுகின்றது.

ஸ்ரீதேவி தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சொந்த ஊராக கொண்டவர்.

இவர் 4 வயதிலேயே திரைப்படத் துறையில் தடம்பதித்த அவர், தமிழில் வெளியான துணைவன் என்ற திரைப்படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார்.

தமிழ். தெலுங்குஇ இந்திஇ மலையாளம்இ கன்னடம்இ உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்;.

தமிழில் 16 வயதினிலேஇ மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களில் அவர் பிரதான பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

இவர் 2013-ம் ஆண்டில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள அதேவேளை, பிலிம்பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்துக்காக தமிழக அரசின் விருது என பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

தொடர்ந்து சினிமாவில் நடித்துவந்த நடிகை ஸ்ரீதேவி, நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் புலி திரைப்படத்தில் நடித்த அவர், இங்கிலிஸ் விங்கிலிஸ் மற்றும் மாம் திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று இரவு துபாய் சென்றார்.

இரவு 11 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.



Sridevi, right, with daughters Jhanvi, center, and Khushi in 2012 at the premiere of








Exclusive Clips