%27%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%27+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%3A+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
Monday, 12 March 2018 - 18:14
'பாலியல்' துன்புறுத்தலுக்கு உள்ளானேன்: பாடகி சின்மயி அதிர்ச்சித்தகவல்
2,753

Views
சமீப காலமாக பெண்களுக்கு எதிராக பல பாலியல் தொல்லை அதிகமாகிகொண்டே இருக்கிறது.

சாதாரண பெண்களுக்கு தான் இந்த நிலைமை என்றால் சினிமா துறையில் இருக்கும் பெண்களுக்கு கூட பொது இடங்களில் சில சில்மிஷ நபர்களால் பாலியில் தொல்லைக்கு உள்ளாகிவருக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு நடிகை கூட தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை ட்விட்டரில் பதிவிட்டதோடு காவல் நிலையத்தில் முறைப்பாடும் அளித்தார்.

தற்போது தமிழ் திரைப்பட பின்னணி பாடகி சின்மயி தனக்கு ஏற்பட்ட பாலியில் தொல்லையை ட்விட்டரில் மனக்குமுறலுடன் பதிவிட்டுள்ளார்.

பின்னணி பாடகி சின்மயி தமிழ், தெலுங்கு ஹிந்தி போன்ற பல படங்களில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சின்மயி அப்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளானேன் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் தனக்கு நேர்ந்த இன்னலை தெரிவித்துள்ள சின்மயி தயவு செய்து பெண்களை அவர்களின் முகம்,வாய்,அவர்கள் அணியும் ஆடைகள், அவர்களின் நடத்தைகள் போன்றவற்றை வைத்து அவர்களை அசிங்கப்படுத்துவதை நிறுத்துங்கள் என்றும் மேலும் ஒரு பெண்ணை அவர் அனுமதியின்றி யார் தொட்டாலும் அவரை பளார் என்று அரையுங்கள் என்றும் கோபத்துடன் பதிவிட்டுள்ளார் சின்மயி.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE