பிரபல இயக்குனருக்கு காரை பரிசாக வழங்கிய நடிகர் சூர்யா..! காரணம் இதுதான்!

Friday, 16 March 2018 - 17:04

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE..%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%21

நடிகர் சூர்யா, இயக்குனர் விக்னே‌ஷ் சிவனுக்கு சிவப்பு நிற டொயோட்டா மகிழூர்தியொன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், தான் நடித்த 'தானா சேர்ந்த கூட்டம் ' திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பினைப் பெற்றதால், மிகவும் மகிழ்ச்சியடைந்த சூர்யா இந்த பரிசை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சூர்யாவின் இந்த அன்பினால் இன்ப அதிர்ச்சியடைந்த விக்னேஷ் சிவன், “என்னைப் போன்று வளர்ந்து வருபவர்களை ஊக்குவிப்பதற்கு ஒரு மனசு வேண்டும்.

உங்களின் இந்த அளவற்ற அன்பிற்கு நான் தகுதியானவனா என்பது தெரியவில்லை. வாய்ப்பிற்கும், இந்த தரணத்திற்கும் மிக்க நன்றி.

யார் என்ன சொன்னாலும் அன்போடு இருப்போம்” என்று சூர்யாவிற்கு நன்றி சொல்லியிருக்கிறார்.

இதற்கு முன்பு சூர்யா, ‘சிங்கம் 3’ படத்தின் வெற்றிக்காக இயக்குநர் ஹரிக்கு, டொயோட்டா ஃபார்டியூனர் மகிழூர்தி ஒன்றைப் பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.








Exclusive Clips