%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81..%21%21
Saturday, 24 March 2018 - 10:21
நீதிமன்றம் நேற்று பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!
40

Shares
4,869

Views

தமிழ் சினிமா, பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை சென்றுவிட்டார் நடிகர் தனுஷ்.

ஆனால் இவர் தன்னுடைய மகன் என மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி பல வருடங்களாக கூறி வருகின்றனர்.

இதற்காக வழக்கும் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தனுஷ் முறையிட்டிருந்தார்.

இதில், தன்னுடைய பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தனுஷுக்கு மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து, தனுஷ் தாக்கல் செய்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை ஏற்று, அத்தம்பதியர் மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க தடை விதித்து மதுரைக் கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார்.

பின்னர், தனுஷ், தாக்கல் செய்த பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை எனவும், இந்த போலி ஆவணங்களின் அடிப்படையில்தான் தனுஷுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது எனவும் கூறி, கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் மதுரைக் கிளையில் மனு தொடர்ந்தனர்.

இந்நிலையில் மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி அம்மனுவை ரத்து செய்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE