%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..%21
Wednesday, 28 March 2018 - 13:08
பிரபல நடிகர் கரண் படுக்கையறையில் பிணமாக மீட்பு..!
22,531

Views
பிரபல சின்னத்திரை நடிகர் ஜிக்னேஷ் என்ற கரண் பரஞ்பே அவரது அறையில் பிணமாக கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மும்பையில் அமைந்துள்ள அவரின் வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சஞ்சீவணி மற்றும் டில் மில் கெயே போன்ற வட இந்திய நாடகங்களில் நடித்து அவர் புகழ் பெற்றிருந்தார்.

டில் மில் கெயே நிகழ்ச்சியில் ஆண் தாதியாக நடித்து ரசிகர்களை கவர்ந்ததால் குறித்த கதாபாத்திரத்தின் பேரிலேயே ஜிக்னேஷ் என அழைக்கப்பட்டு வந்தார்.

அதிக பெண் ரசிகைகள் இருக்கும் தொலைக்காட்சி நடிகர் வரிசையில் இவரும் உள்ளார்.

இந்நிலையில், மும்பையில் உள்ள அவரது வீட்டு படுக்கையறைக்கு கடந்த 25ம் திகதி காலை 11 மணியளவில் சென்ற தாய் அவர் உயிரிழந்த கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

கரன் அவரது பெற்றோருக்கு ஒற்றைப் பிள்ளை என தெரிவிக்கப்படுகிறது.

இவருக்கு வயது 26 ஆகும்.

இன்னிலையில் , கரணுக்கு தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் , மரணத்திற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவரவில்லை.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE