%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..%21%21
Saturday, 23 June 2018 - 11:58
தனுஷ் படுகாயம்..!!
34

Shares
4,138

Views
பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாரி 2’ படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது நடிகர் தனுஷ் படுகாயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மாரி 2’.

பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.

மேலும் வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தோமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
 
இதில் டோவினோ தோமஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவருக்கும் தனுஷுக்கும் இடையேயான சண்டைக்காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது.

அப்போது, எதிர்பாராத விதமாக வலது காலிலும், இடது கையிலும் தனுஷுக்கு காயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE