%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%21%21
Thursday, 06 September 2018 - 15:29
ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த பிரபல இளம் நடிகை!!
1,986

Views
இந்தியா - மேற்கு வங்காள மாநிலத்தில் ஹோட்டல் அறையில் பாயெல் சக்ரபோர்டி என்ற நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரி பகுதியில் உள்ள ஹோட்டலின் அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ஹோட்டல் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Image result for actor-Payel-Chakraborty

இதையடுத்து அந்த அறையை சோதனை செய்த போது, மேற்குவங்காள மாநில நடிகையான பாயெல் சக்ரபோர்டி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் நிர்வாகம் காவல்துறையிக்கு தகவல் அளித்தனர்.

Image result for actor-Payel-Chakraborty

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், பாயெல் நேற்று மாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for actor-Payel-Chakraborty

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இளம் நடிகையின் மர்ம மரணம் குறித்து பல்வேறு வழிகளிலும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE