குற்றச்சாட்டு அம்பலமானதால் நடிகை நிலானி எடுத்த விபரீத முடிவு..

Thursday, 20 September 2018 - 17:03

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81..
நடிகை நிலானி,  காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்கிறார் என்று நான்கு தினங்களுக்கு முன் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.  

இதனால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான காந்தி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து  தற்கொலைக்கு முயன்றார்.

இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர் சிகிச்சை அளித்தும் காந்தி மரணம் அடைத்தார்.

இதனையடுத்து சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நிலானி, காந்தி லலித்குமார் தற்கொலைக்கு நான் காரணமல்ல என கூறியுள்ளார் நிலானி.

காந்தியை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தேன் ஆனால் காந்தி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி என்னிடம் இருந்து அதிக பணம் வாங்கிகொண்டு செலவு செய்ததால் அவரை விட்டு ஒதுங்கினேன்.

மேலும்  நானும் காந்தியும் சேர்ந்திருப்பது போன்ற படங்களை வேண்டுமென்றே சமூகவலைதளங்களில் பரப்புகின்றனர்.

படங்களை வெளியிட்டு அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை நிலானி தனது மனுவில் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து மரணம் அடைந்த லலித் காந்தியின் சகோதரர், தன்னுடைய தம்பியின் மரணத்திற்கு முழு காரணம் நிலானி தான், தன்னுடைய தம்பியின் மீது நிலானி தவறான புகார் கொடுத்ததால், காந்தி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் தற்கொலைக்கு முக்கிய காரணம் நிலானி மட்டுமே. தன்னுடைய தம்பியை நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார்.

தற்போது வரை உண்மை நிலவரம் என்ன என யாருக்கும் தெரியவில்லை. இப்போது தான் நாங்கள் உண்மையை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறோம். மேலும், நிலானிக்கு குடி பழக்கம் உள்ளது. நிறைய ஆண்களுடன் தொடர்பும் உள்ளது விரைவில் இது குறித்து ஆதாரத்தை வெளியிடுவேன் என கூறியுள்ளார்.

லலித் காந்தியின் சகோதரர் ரகுகுமார் கூறியதை அடுத்து நிலானி மீதான குற்றச்சாட்டு அம்பலமானதால், வளசரவாக்கம் வீட்டில் விஷத்தை அருந்தி தற்கொலை முயற்சித்துள்ளார்.

விஷத்தை அருந்தி மயக்கமான நிலையில், அவரது இரண்டு குழந்தைகளும் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர்.

 குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் நடிகை நிலானியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

காதலன் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள நிலையில், நிலானி விஷம் குடித்து  தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








Exclusive Clips