இன்று அதிகாலை கார் விபத்தில் சிக்கிய மூன்று பிரபல நடிகர்கள்..!

Monday, 24 September 2018 - 16:08

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21+
கன்னட நடிகர்கள் சிலர் பயணித்த சிற்றூர்ந்தொன்று இன்று அதிகாலை மைசூரில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரபல நடிகர்களான தர்சன் , தேவராஜ் மற்றும் ப்ரஜ்வால் தேவராஜ் ஆகியோரே இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் தர்ஷனின் கை எலும்பு முறிந்துள்ளது, தேவராஜுக்கு நெஞ்சில் அடிபட்டிருக்கிறது.

ப்ரஜ்வல் மற்றும் ஒருவருக்கு கழுத்தில் அடி பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது காயம் அடைந்த 4 பேரில் 3 பேருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மைசூரில் இடம்பெற்ற படப்பிடிப்பொன்றிற்காக சென்று கொண்டிருந்த வேளையே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.







Exclusive Clips