%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%21%21+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%3A+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF+
Wednesday, 10 October 2018 - 16:05
வெடிக்கும் பாலியல் சர்ச்சை!! வாய் திறந்த கவிஞர் வைரமுத்து: மீண்டும் பதிலடி கொடுத்த சின்மயி
3,739

Views
தன்மீதான பாடகி சின்மயின் விமர்சனங்களுக்கு கவிஞர் வைரமுத்து முதல் முறையாக பதில் அளித்துள்ளார்.

இருப்பினும் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக அதை தெரிவித்துள்ளார்.

பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக சில பிரபலங்கள் குறித்து வரும் பாலியல் புகார்களை பதிவிட்டு வருகிறார்.

கவிஞர் வைரமுத்து குறித்தும், சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை, உண்மையைக் காலம் சொல்லும். என பதிவிட்டுள்ளார்.


ஆனால் இந்த பதிவை ரீடிவிட் செய்துள்ள சின்மயி, அதில் பொய்யர் என்ற பொருள்படும் LIAR என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம், டிவிட்டரில் நேரடியாக, சின்மயி, வைரமுத்து மீது தாக்குதல் தொடுத்துள்ளார். இரு திரை ஆளுமைகள் நடுவேயான இந்த டிவிட்டர் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதனிடையே, வைரமுத்து, திராவிட அரசியலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருபவர், தமிழுக்காக குரல் கொடுப்பவர் என்பதால், சமீபகாலங்களில் தொடர்ச்சியாக அவர் கட்டம் கட்டப்படுகிறார். அதன் ஒரு பகுதிதான் அவர் மீதான புதிய விமர்சனங்கள் என்று, சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து கூறுவதை பார்க்க முடிகிறது.

பாடகி சின்மயிக்கு முன்பாக, மற்றொரு பாடகியான சுசித்ரா, இதுபோல பாலியல் புகார்களை வரிசையாக டிவிட்டரில் அவிழ்த்துவிட்டார். ஆனால் அவர் சில காணொலிகளையும் வெளியிட்டார். இதனால் அதற்கு சுசிலீக்ஸ் என்று நெட்டிசன்கள் பெயரிட்டு அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE