%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+Golden+Film+Awards+2018+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
Wednesday, 10 October 2018 - 19:38
ஹிரு Golden Film Awards 2018 விருது வழங்கும் நிகழ்வை நேரடியாக பார்க்க உங்களுக்கும் வாய்ப்பு
20

Shares
2,465

Views
ஆசிய ஊடக வலையமைப்பின் நிறுவனத் தலைவர் திரு.ரேய்னோ சில்வாவின் எண்ணக்கருவுக்கு அமைய மூன்றாவது முறையாகவும் இடம்பெறும் ஹிரு Golden Film Awards 2018  விருது வழங்கும் நிகழ்வு 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் மிகவும் கோலகலமாக இடம்பெறவுள்ளது.

இந்த வருட விருது விழாவின் போது 2016 – 2017 ஆண்டுகளினுள் திரையிடப்பட்ட 50 திரைப்படங்களுடன், குறும் திரைப்படங்களை உருவாக்கிய 150 பேரும் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், 40 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் பொலிவுட் நட்சத்திரங்களான கோவிந்தா, ஜீ சூலா, சைஃப் அலிகான், ஷில்பா ஷெட்டி, சித்தார்த் மல்ஹோத்ரா, சோன்காக்ஷி ஷிந்தா, சரீன் கான் ஆகியோர் கலந்து கொள்வுள்ளனர்.

இந்த கோலாகல நிகழ்வை நேரடியாக பார்ப்பதற்கான வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

இந்த நிகழ்விற்கான அழைப்பிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஹிரு தொலைக்காட்சியில் இரவு 7.30 மணி முதல் 9.55 மணி வரை ஒளிபரப்பப்படும் சின்னத்திரைகளை பார்வையிட வேண்டும்.

இதன்போது Golden Film Awards 2018  திரையிடப்படும் எண்ணிக்கையை குறுந்தகல் ஊடாக அனுப்ப வேண்டும்.

HGFA இடைவெளி T இடைவெளி திரையிடப்படும் எண்ணிக்கையுடன் உங்களின் முழுப்பெயரை பதிவு செய்து 7766 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்பவும்.

இவ்வாறு பத்து நாட்களுக்கு 1000 அழைப்பிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த அழைப்பிதழ்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என்பதை கவனத்தில் கொள்ளவும்..

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE