%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81..%21+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF+%28+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29
Friday, 12 October 2018 - 15:53
வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு..! எல்லா கேள்விகளுக்கும் ஒரே காணொளியில் பதில் கூறியுள்ள சின்மயி ( காணொளி இணைப்பு)
1,262

Views
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அண்மையில் பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.

அதனை தொடர்ந்து மீ டூ என்ற ஹேஸ் டெக் மூலம் பிரபலங்களினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தாம் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகளை வௌியிட ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் , சுவிட்சர்லாந்து இசைநிகழ்ச்சியில் இடம்பெற்ற சம்பவத்தை பாடகி சின்மயி பேஸ்புக் நேரலையில் தோன்றி விளக்கமளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில்,

வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகள் அனைத்து உண்மைதான்.

ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண்களிடம் கேட்டால் தாங்கள் சந்தித்த அல்லது பார்த்த பிரச்சினைகளை கூறுவர்.

காது கொடுத்து கேளுங்கள் சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாலியல் தொந்தரவு தொடர்பாக ஆண் குழந்தைகளுக்கு எவ்வித விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுவதில்லை.

பாலியல் தொந்தரவு குறித்து பெண் குழந்தைகள் கூறினால் அதை காது கொடுத்து கேட்க வேண்டும்.

வைரமுத்துவால் பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் சொல்ல தயங்குகின்றனர்.

அரசியல் பின்புலத்துடன் இருக்கும் வைரமுத்துவை எதிர்க்க எனக்கு அப்போது தைரியம் இல்லை.

வைரமுத்து தவறாக நடந்து கொண்டார் என்று கூறுவதற்கு சக பாடகிகள் பலருக்கு தயக்கம் காட்டுகின்றனர்.

எப்படி கிடைக்கும் பாலியல் தொல்லைகளுக்கு ஆதாரம் கேட்கிறார்கள் அதை எப்படி பெண்களால் தர முடியும். என் திருமணத்திற்கு மக்கள் தொடர்பாளர்கள் மூலம்தான் வைரமுத்துவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.

அவரை திருமணத்துக்கு அழைக்கவில்லை எனில் அதற்கான விளக்கத்தை கொடுக்க வேண்டியிருக்கும்.

தவறுகளை தெரிவித்தால் தட்டிக் கேட்டால் அந்த பெண்களின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

வைரமுத்து மீதான குற்றச்சாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன்.

பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள்தான் வெட்கப்பட வேண்டும் நான் ஏன் வெட்கப்பட வேண்டும்.

மீ டூ மூலம் ஏராளமான குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்று தெரிவித்துள்ளார் சின்மயி.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE