%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88..%21+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21%21+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Thursday, 18 October 2018 - 7:40
பிரபல நடிகை படுகொலை..! புதரில் இருந்து சடலம் கண்டுபிடிப்பு!! அதிர்ச்சியில் திரையுலகம்!! (படங்கள்)
1,502

Views
பொலிவுட் நடிகையொருவர் அவரின் முகநூல் காதலரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில், கையில் ஒரு சூட்கேஸோடு வாடகை மகிழூர்தியில் ஏறிய ஒரு வாலிபர் தான் விமான நிலையம் செல்ல வேண்டும் எனக்கூறியுள்ளார்.

ஆனால், மகிழூர்தியை வேறு பக்கம் செலுத்த சொன்ன அவர் ஓரிடத்தில் வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு வைத்திருந்த சூட்கேஸை புதரில் வீசி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதனால் சந்தேகம் அடைந்த சாரதி சம்பவம் தொடர்பில் காவற்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

அந்த இடத்தில் காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணை செய்த போது, சூட்கேஸில் ஒரு இளம்பெண்ணின் சடலம் இருந்தது கண்டு காவற்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.



கண்காணிப்பு கெமரா மூலம் சோதனை செய்ததில், சூட்கேஸை வீசி விட்டு சென்ற அந்த வாலிபர், சிறிது தூரம் நடந்து சென்று ஒரு முச்சக்கரவண்டியில் ஏறிச்சென்ற வாலிபர், அதன்பின் வேறொரு மகிழூர்தியில் ஏறி சென்றது பதிவாகியுள்ளது.

காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவரின் பெயர் முசாமில் சையத் என்ற கல்லூரி வாலிபர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை காவற்துறையினர் கைது செய்தனர்.



அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளம்பெண், பொலிவுட்டில் சிறு சிறு வேடங்களில் நடித்த மான்சி தீக்சித் என்பதும், முகநூல் மூலமாக சையத்திற்கு பழக்கமானவர் என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் , சம்பவ தினத்தன்று முசாமை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் மான்சி.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மான்சியை இரும்பு நாற்காலியால் சையத் தாக்கியுள்ளார்.



இதில், மான்சி மரணமடைந்தார். எனவே, அவரது உடலை சூட்கேஸில் வைத்து புதரில் வீசியதை சையத் ஒத்துக்கொண்டார்.

அவரிடம் தொடர்ந்து காவற்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE