%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%27%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%27+..%21%21
Thursday, 08 November 2018 - 11:49
இலங்கையில் இமாலய வசூல் சாதனை படைத்த 'சர்கார்' ..!!
7,738

Views
தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று உலகளவில் மிகவும் பிரமாண்டமாக வெளியான படம் சர்கார்.

இத் திரைப்படம் தமிழகத்தில் மாத்திரம் ஒரே நாளில்  32.5 கோடி ( இந்திய ரூபாய் ) களை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

மேலும் சென்னையில் மாத்திரம் 2.41 கோடி ரூபாய்களை ( இந்திய ரூபாய் ) சர்கார் வசூலித்துள்ளது.

தமிழ் நாட்டுக்கு அடுத்ததாக சர்கார் திரைப்படம் கேராளாவில் சக்கை போடு போட்டு வருகிறது.

முதல் நாளில் 6.6 கோடி ரூபாய்களை ( இந்திய ரூபாய் ) கேரளாவில் வசூலித்து சாதனைப்படைத்துள்ளது.

ஆனால் இதை எல்லாம் தாண்டி இலங்கையிலும் சர்கார் திரைப்படம் ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் முதல் நாளில் 3.5 கோடி ரூபாய் ( 1.4 கோடி இந்திய ரூபாய் ) வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக கடந்த வருடம் வௌியான 'மெர்சல்' முதல் 5 நாட்களில் சுமார் 8 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE