%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%21+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%87+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%21%21%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29
Monday, 12 November 2018 - 15:28
இலவச வீடும் வேண்டாம்! ஒரு படி மேலே சென்று வீட்டை உடைத்த விஜய் ரசிகர்!!! (காணொளி இணைப்பு)
1,822

Views
தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியான திரைப்படம் 'சர்கார்'.

இப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் தற்போது வரை, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தமிழகம் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் முதலுக்கு மோசம் இல்லாத வகையில் நல்ல வசூல் செய்து வருகிறது.

ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக இந்த படத்தில் இருந்து 3 காட்சிகள் துண்டிக்கப்பட்டதால், முன்பு இருந்த வரவேற்பை விட இப்போது இந்த படத்திற்கு சற்று வரவேற்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏற்கனவே விஜய் ரசிகர்கள் சிலர், திரைப்படத்தில் வந்த காட்சிகளை போல  தங்கள் வீட்டில் இருந்த , இலவச பொருட்கள் மிஸ்சி கிரைண்டர் போன்றவற்றை உடைத்து விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தற்போது ரசிகர் ஒருவர் ஒரு படி மேலே சென்று அரசாங்கம் இலவசமாக கட்டிக்கொடித்த வீட்டை உடைக்கிறார் என கூறி ஒரு காணொளியொன்று வௌியாகியுள்ளது.

ஆனால் இது உண்மையில் விஜய் ரசிகர் வீட்டை உடைக்கும் காட்சியா அல்லது வேறு ஏதாவது பணிக்காக வீடு உடைக்கப்படுகிறதா என உண்மை தகவல் வெளியாகவில்லை.

குறித்த காணொளி கீழே....Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE