%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%B2%E0%AF%80++%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
Tuesday, 13 November 2018 - 11:11
சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய திரைப்படைத்துறை வல்லுனர் ஸ்டீவன் - லீ காலமானார்
14

Shares
1,786

Views
பல்வேறு ஹொலிவூட் வீரதீர திரைப்படங்களை உருவாக்கிய அமெரிக்க திரைப்படைத்துறை வல்லுனர் ஸ்டீவன் -லீ தமது 95வது வயதில் லொஸ் ஏஞ்சலிஸில் காலமானார்.

ஸ்பைடர் மென், இன்க்ரடபிள் ஹல்க், ப்ளக் பென்தர் உள்ளிட்ட பல கதாபாத்திரங்களின் உருவாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்த அவர், 1961ம் ஆண்டு ஃபென்டாஸ்டிக்-4 என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு பிரவேசித்தார்.

அமெரிக்க திரையுலகில் முதலாவது கறுப்பின வீரதீர கதாபாத்திரமான ப்ளக் பெந்தரை உருவாக்கிய அவர், எக்ஸ்மன், அயன்மன், டொபக்டர் ஸ்ட்ரேன்ஜ் உள்ளிட்ட கதாப்பாத்திரங்களையும் படைத்துள்ளார்.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE