+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%21%21
Monday, 31 December 2018 - 16:15
சர்கார் டீசர் சாதனைகளை முறியடிக்க தவறிய விஸ்வாசம் ட்ரெய்லர்!!
1,860

Views
தல அஜித் நடிப்பில் எதிர்வரும் பொங்கலுக்கு வௌியாகவுள்ள திரைப்படம் விஸ்வாசம்.

வீரம் , வேதாளம் , விவேகம் திரைப்படங்களின் இயக்குனர் சிவா இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் , நேற்று பிற்பகல் இந்த படத்தின் ட்ரெய்லர் யூ்டியூபில் வௌியிடப்பட்டது.

ட்ரெய்லர் வௌியான சில நிமிடங்களில் பல இலட்ச பார்வைகளை பெற்று சாதனை படைத்தது.

மேலும் , ட்ரெய்லரை ஒரே நேரத்தில் அதிக ரசிகர்கள் பார்வையிட்டதால் யூடியூபே ஸ்தம்பித்து போனமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , கடந்த 24 மணி நேரத்தில் விஸ்வாசம் ட்ரெய்லர் செய்த சாதனைகளை பார்ப்போம்.

விஸ்வாசம் ட்ரெய்லர் 4 நிமிடங்களில் ஒரு இலட்சம் லைக்குகளை பெற்று விஜயின் சர்கார் டீசர் சாதனையை முறியடித்துள்ளது.

விஜயின் சர்கார் 5 நிமிடங்களில் ஒரு இலட்சம் லைக்குகளை பெற்றிருந்தது.

எனினும் , மற்றைய சர்கார் டீசர் சாதனைகள் எதனையும் விஸ்வாசம் ட்ரெய்லர் முறியடிக்கவில்லை.

சர்கார் டீசர் 45 நிமிடங்களில் 5 இலட்சத்து 75 ஆயிரம் லைக்குகளை பெற்றிருந்த நிலையில் விஸ்வாசம் ட்ரெய்லர் 45 நிமிடங்களில் 5 இலடச்த்து 73 ஆயிரம் லைக்குகளை மாத்திரமே பெற்றது.

மேலும் ,  சர்கார் டீசர் 55 நிமிடத்தில் 4 மில்லியன் பார்வைகளையும் , 75 நிமிடங்களில் 5 மில்லியன் பார்வைகளையும் பெற்றிருந்தது.

எனினும் , விஸ்வாசம் டரெய்லர் ஒரு மணி நேரத்தில் 3.4 மில்லியன் பார்வைகளையும் , 75 நிமிடங்களில் 4 மில்லியன் பார்வைகளையும் பெற்றிருந்தது. அதேபோல் , சர்கார் டீசர் 5 மணித்தியாலங்களில் 1 மில்லியன் லைக்குகளை அள்ளியிருந்தது.

எனினும் , விஸ்வாசம் ட்ரெய்லர் 5 மணித்தியாலங்கில் 9 இலட்சத்து 7 ஆயிரம் லைக்குகளை மாத்திரமே பெற்றது.

24 மணி நேர முடிவில் , சர்கார் டீசர் 16 மில்லியன் பார்வைகளையும் , 1.2 மில்லியன் லைக்குகளையும் பெற்றது.

எவ்வாறாயினும் , விஸ்வாசம் ட்ரெய்லர் 24 மணி நேர முடிவில் 12 மில்லியன் பார்வைகளையும் , 1.1 லைக்குகளையும் மாத்திரமே பெற்றமை குறிப்பிடத்தக்கது.ஆகவே , விஸ்வாசம் ட்ரெய்லரால் விஜயின் சர்கார் டீசர் சாதனைகளை முறியடிக்க முடியாமல் போயுள்ளமை அஜித் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE