கட்அவுட் சரிந்து விழுந்து 6 அஜித் ரசிகர்கள் பரிதாப நிலையில்..!! - அதிர்ச்சி காணொளி இதோ!!

Thursday, 10 January 2019 - 18:11

%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+6+%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D..%21%21+-+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B%21%21
பொங்கலை முன்னிட்டு தல ரசிகர்களுக்கு விஸ்வாசமும் தலைவர் ரசிகர்களுக்கு பேட்டயும் இன்று வௌியாகியுள்ளது.

இந்த இரு திரைப்படங்களும் பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ள நிலையில் , திரைப்படத்தின் நாயகர்களுக்கு போட்டிப் போட்டுக்கொண்டு அவர்களின் உருவப்படங்களை கட்அவுட்டாக வடிவமைப்பதில் திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட ரசிகர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் , இந்தியாவில் தமிழகத்தில் விழுப்புரத்தில் அமைந்துள்ள சீனிவாசா திரையரங்கிற்கு முன்னால் தல அஜித்தின் சுமார் 50 அடி உயரமுடைய கட்அவுட் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

குறித்த கட்அவுட்டிற்கு ரசிகர்கள் பூமாலை அணிவிப்பதும் , பாலாபிஷேகம் செய்து மகிழ்வதுமாக காணப்பட்டனர்.

இவ்வாறு 50 அடி உயரத்திற்கு ஏறுவதற்கு முயற்சித்த தல அஜித்தின் ரசிகர்கள் கட்அவுட்வுடன் சரிந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது , அங்கிருந்த 6 ரசிகர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.















Exclusive Clips