%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%21%21+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%3F%3F%3F
Monday, 14 January 2019 - 16:14
தமிழ் திரையுலக வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம்!! சரிகிறதா செல்வாக்கு???
141

Views
தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் வியாபாரம், வசூல் எந்த உச்சத்துக்குப் போகும் என்பதை நிரூபித்த முதல் நடிகர் ரஜினிகாந்த்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என முதன் முதலில் தமிழ்ப் படங்களுக்கான வியாபார எல்லையை விரிவாக்கியவரும் ரஜினிகாந்த்தான்.

ஆனால், கடந்த சில படங்களாக அவருடைய படங்களின் தமிழ்நாடு வசூல் கொஞ்சம் தடுமாறி வருகிறது என்பதுதான் உண்மை.

சிவாஜி, எந்திரன் ஆகிய இரண்டு படங்கள்தான் புதிய வசூல் சாதனையை ஏற்படுத்தின. அவற்றிற்கு முன்னும், பின்னும் வந்த படங்கள் மற்ற நடிகர்களின் படங்களால் முறியடிக்கப்பட்டன. 

குறிப்பாக விஜய், படத்திற்குப் படம் ரஜினியை விட சிலபல மடங்கு வேகமாக முன்னேறிக் கொண்டு செல்கிறார்.

துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், சர்கார் ஆகிய ஐந்து படங்களின் வசூல் விஜய்யை இப்போது தமிழ்நாட்டின் புதிய உச்ச நட்சத்திரமாக மாற்றியுள்ளது.

அது போன்று தொடர்ச்சியாக ஐந்து வசூல் படங்களை ரஜினியால் கொடுக்க முடியவில்லை என்பதை அவரது ரசிகர்களும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

காலா, கபாலி, 2.0, பேட்ட ஆகிய படங்களின் வசூல் விஜய் பட வசூலுடன் ஒப்பிடும் போது குறைவுதான்.

பேட்ட படத்தின் தமிழ்நாடு வசூல் தற்போது விஸ்வாசம் படத்தை விட குறைவாக இருப்பதும் ஆச்சரியமளிக்கிறது என்கிறார்கள்.

ரஜினியை முந்திவிட்டதாக மகிழ்ச்சியடைந்த விஜய் ரசிகர்களுடன், இப்போது அஜித் ரசிகர்களும் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். 

ஆனாலும், உலக அளவில் அவர்களால் ரஜினி வசூலை இன்னும் நெருங்க முடியவில்லை. ரஜினியைப் போன்று 40 வருடங்கள் அவர்கள் இருவராலும் சாதனை புரிய முடியுமா என்பது சந்தேகம்தான் என்கிறார் மூத்த வினியோகஸ்தர் ஒருவர்.

எப்படியோ, ரஜினிகாந்த்தின் இடத்தை அசைத்துப் பார்க்கும் வேலையை விஜய்யும், அஜித்தும் ஆரம்பித்துவிட்டார்கள்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE