%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%21%21+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21%21
Thursday, 14 February 2019 - 17:19
சென்னையில் பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை!! அதிர்ச்சியில் திரையுலகம்!!
6

Shares
752

Views
துணை நடிகை யாஷிகா சென்னையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தமிழகம் திருப்பூரை சேர்ந்த யாஷிகா விமல் நடித்த மன்னர் வகையரா என்ற படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

பல தொலைக்காட்சித் தொடர்களிலும் யாஷிகா நடித்துள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த யாஷிகாகவுக்கு மோகன் பாபு என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் , இருவரும் திருமணம் செய்துக்கொள்ளாமலேயே கடந்த 4 மாதங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மோகன்பாபு யாஷிகாவுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வௌியேறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த யாஷிகா இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் , தற்கொலைக்கு முன்னர் யாஷிகா அவரது தாயாருக்கு வாட்ஸ் எப்பில் காணொளியொன்றை பதிவு செய்து அனுப்பியுள்ளார்.

அதில் , திருமணம் செய்துக்கொள்ளாமல் என்னை ஏமாற்றிய மோகன்பாபுவுக்கு தக்க தண்டனை பெற்றுக்கொடுக்குமாறு யாஷிகா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE