%27%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%27+%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
Monday, 04 March 2019 - 11:40
'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்
2,146

Views
பல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை கொண்ட 'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியின் நேரடி இறுதி நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

கொழும்பு தாமரை தடாக கலை அரங்கத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த இறுதி நிகழ்வில் 4 பாடர்கள் போட்டியிட்டனர்.

இறுதியில் மங்கள டென்னெக்ஸ் என்ற பாடகர் அதிக வாக்குகளை பெற்று முதலாவது இடத்தை தட்டிச்சென்றார்.

அவருக்கு 60 லட்சம் ரூபா பெறுமதியான புத்தம்புதிய அவுடி மகிழுந்து ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

அத்துடன் வெற்றி கேடயமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை பார்வையிடுபவர்கள் ஹிரு ஸ்டார் மொபைல் எப்பின் ஊடாக தமது வாக்குகளை பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE