%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21%21
Tuesday, 12 March 2019 - 15:38
சி.சி.டி.வியில் பதிவான நடிகர் விமலின் மறுமுகம்!!
1,718

Views
குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு, கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை இவர் மீது இதுபோன்ற முறைப்பாடு எதுவும் வராத நிலையில் முதல் முறையாக இவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் கில்லி, கிரீடம், களவாணி, பசங்க, வாகை சூட வா, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, மஞ்சப்பை, கேலி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் விமல்.

இவர் கன்னட நடிகர் அபிஷேக்கை அடித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெங்களூரு ஆர்.டி நரைச் சேர்ந்தவர் கன்னட நடிகர் அபிஷேக்.

கன்னட படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் 'அவன் அவள் அது' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சென்னை விருகம்பாக்கம் பாஸ்கர் காலனி 2-வது தெருவில் உள்ள தனியார் குடியிருப்பில் அபிஷேக் தங்கி வருகிறார்.

இந்த குடியிருப்புக்கு தனது நண்பர்களுடன் சென்ற விமல், வாயிலில் இருந்த நடிகர் அபிஷேக்கிடம் அறை இருக்கிறதா? என்று கேட்டுள்ளார்.

தன்னை ஊழியர் என்று நினைத்துக் கொண்டு தவறாக கேட்டதாக விமலிடம் அபிஷேக் தகராறு செய்துள்ளார்.

இதில் வாக்குவாதம் முற்றி, அபிஷேக்கை தனது நண்பர்களுடன் சேர்ந்து விமல் தாக்கியதாகத் தெரிகிறது.

காயமடைந்த அபிஷேக் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதையடுத்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் விமல் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் முறைப்பாட்டின் கீழ் ஆபாசமாக திட்டுதல் என்ற பிரிவின் கீழ் நடிகர் விமல் உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் விமல் படபிடிப்புக்காக வெளியூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணைக்காக விமலை காவல்துறையினர் அழைத்துள்ளனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE