%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%21%21+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
Wednesday, 13 March 2019 - 17:37
விபத்தை தடுத்து நிறுத்தி பலரை காப்பாற்றிய நடிகர் விஜய்!! வைரலாகும் காணொளி
4,446

Views
ரசிகர்களின் கூட்டத்தால் சரிந்து விழும் இரும்பு வேலியை நடிகர் விஜய் தாங்கிப்பிடிக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இன்னும் பெயரிப்படாத விஜயின் 63வது திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப்படத்தில் நயன்தாரா,கதிர், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

கடந்த ஜனவரி மாதத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகியது.

இடையே இடைவெளி விடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் விஜயை காண ரசிகர்கள் குவிவதும், அவர்களை விஜய் சந்தித்து கையசைப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

சமீபத்தில் காரில் செல்லும் விஜயை இரு சக்கர வாகனத்தில் சென்ற ரசிகர்கள் துரத்திச்சென்று கையசைத்தனர், அவர்களுக்கு சைகையால் அறிவுரை கூறிய விஜய், அவர்களை அங்கிருந்து போகச்சொன்னார்.

இந்நிலையில் விஜயை பார்க்க ரசிகர்கள் கூடியதால் இரும்பு வேலி சரிந்துவிழும் காணொளி வைரலாகி வருகிறது.

அந்த வீகாணொளியில்ல் இரும்பு வேலிக்கு அந்தப்பக்கம் நிற்கும் ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு விஜயை பார்த்து கையசைக்கின்றன.

கூட்டம் அதிகரிக்கவே இரும்பு வேலி விஜய் நிற்கும் பக்கமாக சாரிகிறது.

உடனே சுதாரித்துக்கொண்ட விஜய், இரும்புவேலியை தாங்கிப்பிடிக்கிறார்.

சிறிது நேரத்தில் படக்குழுவினரைச் சேர்ந்த பலரும் இரும்பு வேலியை தாங்கிப்பிடித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE