சினிமா வட்டாரத்தில் பரபரப்பு...

Saturday, 23 March 2019 - 12:11

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...

 நடிகர் விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கில்  வெளியான "அர்ஜுன் ரெட்டி"  மூலம்  பிரபலமான விஜய் தேவரகொண்டா தமிழில் நோட்டா  மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

அர்ஜுன் ரெட்டி படத்தின் பிரமாண்ட வெற்றியால் விஜய் தேவரகொண்டாக்கு தமிழகத்திலும் ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர்.

தெலுங்கில் பிசியாக நடித்து வரும் விஜய் தேவரகொண்டா  ஓய்வு எடுக்க நேரம் இல்லாமல் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய விஜய் தேவரகொண்டா, கடந்த புதன்கிழமை காலை 6 மணி வரை படப்பிடிப்பில் இருந்தேன்.

அப்போது எனக்கு காய்ச்சல் வந்து சோர்வாகிவிட்டேன். சீக்கிரம் குணமடைய ஓய்வில் மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா காய்ச்சல், சோர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து தெலுங்கு சினிமா வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.












Exclusive Clips