%27%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%27+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AE%B2+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
Monday, 12 August 2019 - 12:12
'நேர் கொண்ட பார்வை' படம் பார்த்து கட்டணத்தை திரும்ப பெற்ற தல ரசிகர்கள்..!
418

Views
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் தல அஜித் நடித்த “நேர் கொண்ட பார்வை”.

இந்தப் படம் தமிழகம் முழுவதும் ரூபாய் 30 கோடி வசூல் செய்துள்ளதாகவும், அமெரிக்காவில் ஒரு மில்லியன் டொலர் வசூல் செய்துள்ளதாகவும், சென்னையில் ரூபாய் 4 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில், அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்களிடமிருந்து கட்டணத்தை திரும்பப் பெற்றுள்ளள சம்பவமொன்று தமிழகத்தில் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் 'நேர்கொண்ட பார்வை' படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணங்கள் பெறப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் அதிகாரிகள் திடீரென சோதனையிட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம் போன்ற பகுதிகளில் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் அதிக கட்டணம் ரசிகர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகமாக வசூல் செய்யப்பட்ட கட்டணங்களை திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து திரும்பப் பெற்ற அதிகாரிகள், அந்த பணத்தை பார்வையாளர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

இதனால் தல ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். இது போன்ற அதிரடி சோதனைகளை தமிழகம் முழுவதிலும் மேற்கொள்ள வேண்டுமென ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE