%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+-+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87...%21
Wednesday, 04 September 2019 - 16:11
விஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி - விபரங்கள் உள்ளே...!
341

Views
இன்றைய தலைமுறையினர் கொண்டாடும் தமிழ் சினிமாவின் இரண்டு தூண்களாக விஜய் மற்றும் அஜித் ஆகியோர் காணப்படுகின்றனர்.

பொதுவாக இவர்கள் இருவரின் படங்கள் வெளியாகும் பொழுதும் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்ப்பு கிடைப்பது விசேடமானதாகும்.

இறுதியாக 2014 ஆம் ஆண்டு இவர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி வசூலில் சாதனைப்படைத்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தல அஜித் இன் 60வது படமும் தளபதி விஜய்யின் 64வது படமும் அடுத்த வருடம் ஒரே நேரத்தில் வெளியாகும் என்ற ருசிகர தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தல அஜித்தின் 60 ஆவது திரைப்படத்தில் ஹாலிவுட் கதாநாயகன் ஒருவர் வில்லனாக நடிக்க உள்ளதுடன் நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பு நிருவனமே இத் திரைப்படத்தையும் தயாரிக்கின்றமை மேற்கோளிட்டுக்காட்டக்கூடியது.

தளபதி 64 படத்தை பொருத்தமட்டில் அனிருந் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தாலும் இன்னும் உத்தியோகபூர்வமான முறையில் அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும் தற்பொழுது இந்த திரைப்படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்பதே அந்த தகவல் ஆகும்.

இவ்வாறு பல பிரபலங்கள் ஒரே திரைப்படத்தில் இணைந்து மிக பிரமாண்டமாக அந்த இரண்டு திரைப்படங்களும் உருவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆகவே அடுத்த ஏப்ரல் மாதம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் கொண்டாட்டமானதாக அமையும் என்பது தற்பொழுது உறுதியாகியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE