%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
Sunday, 08 September 2019 - 12:17
பிரபல இயக்குனரும், சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் காலமானார்
4,115

Views
பிரபல இயக்குனரும் சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் காலமானார்.

பாலைவனச் சோலை என்ற படத்தை இயக்கிய இரட்டையர் இயக்குனர்களான ரொபர்ட் ராஜசேகரில் ஒருவரான இயக்குனர் ராஜசேகர், தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ராஜசேகர் திரைப்பட நடிகராகவும், சின்னத்திரை நடிகராகவும் இருந்துள்ளார்.

மேலும் சின்னத்திரை சங்கங்களில் அவர் பொறுப்பு வகித்து வந்தவர்.

இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால், தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

மேலும், மனசுக்குள் மத்தாப்பூ, சின்னப்பூவே மெல்லப் பேசு, தூரம் அதிகமில்லை, கல்யாணக் காலம், பறவைகள் பலவிதம், தூரத்துப் பச்சை போன்ற திரைப்படங்களையும் இந்த இரட்டையர் இயக்குனர்கள் இயக்கி உள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE