%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D..+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D..
Monday, 14 October 2019 - 12:41
பிகில் படத்தின் கிளைமேக்ஸ் இதுதான்.. வெளியான பரபரப்பு தகவல்..
95

Views
தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக பிகில் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் மீது பிரமாண்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

ஏற்கனவே படத்தின் பாடல்கள் ட்ரைலர் என அனைத்தும் செம்ம ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து படம் எப்படியிருக்கும் என்ற ஆவல் தான் அனைவரிடத்திலும்.

இந்நிலையில் பிகில் படத்தில் பணியாற்றிய எடிட்டர் ரூபன், இப்படத்தின் கிளைமேக்ஸ் குறித்து ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

இதில் 'பிகில் கிளைமேக்ஸ் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கும், கால்பந்து போட்டி பைனல் தான் கிளைமேக்ஸ்.

எப்போதும் மேட்ச் விளையாடுபவர்களை விட, பார்ப்பவர்களுக்கு தான் அதிக பதட்டம் இருக்கும், அப்படித்தான் இதிலும்.

மிகவும் ஆர்பாட்டம் இல்லாமல், எல்லோருக்கும் பிடித்த கிளைமேக்ஸாக இது இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE