Hirunews Logo
%E2%80%9C%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D++%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
Monday, 27 November 2017 - 17:49
“மலையக வரலாறும் வாழ்வியலும்” கண்காட்சி ஆரம்பம்
80

Shares
6,401

Views

மலையகத்தின் பாரம்பரிய பொருட்களின் கண்காட்சி இன்று கொட்டகலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் கலாமன்றம் ஏற்பாடு செய்துள்ள “மலையக வரலாறும் வாழ்வியலும்” என்ற ​தொனிப்பொருளிலான கண்காட்சி, கல்லூரி வளாகத்தில் ஆரம்பமாகியது.

கல்வி அமைச்சின் தமிழ் பாடசாலைகளுக்கான அபிவிருத்தி குழுவின் பணிப்பாளர் சு.முரளிதரன் இக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில், மலையக மக்களின் அரசியல், கல்வி, பொருளாதார, வரலாறு தொடர்பான கிடைக்கத்தற்க அரிதான எழுத்து ஆவணங்கள் தொடர்பான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதன் ஆரம்ப வைபவத்தில் அட்டன் கல்வி வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர் பி.ஈ.ஜீ.சுரேந்திரன், முன்னால் கொட்டகலை கலாசாலையின் அதிபர் ஜெயகுமார், மற்றும் கலாசாலையின் அதிபர், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
6,639 Views
16,690 Views
1,792 Views
930 Views
15 Views
45,045 Views
Top