Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Monday, 08 January 2018 - 14:18
இராஜகிரிய மேம்பாலம் மக்கள் பாவனைக்காக திறப்பு
26

Shares
2,101

Views
இராஜகிரியவில் நிலவிய கடும் வாகன நெரிசலுக்கு தீர்வை பெற்று கொடுப்பதற்காக இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம் இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் இந்த பாலம் திறந்து வைவக்கப்பட்டுள்ளது.

இராஜகிரியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த மேம்பாலம் புதிய தொழில் நுட்பத்துடன் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

534 மீற்றர் நீளம் கொண்ட இந்த மேம்பாலம் மேல்மாகாணத்தில் உள்ள மீக நீளமான மேம்பாலமாகவும் கருதப்படுகிறது.

சுமார் 4 ஆயிரத்து 700 மில்லியன் ரூபா செலவில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக இராஜகிரிய மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலவும் பாரிய வாகன நெரிசலுக்கு தீர்வு ஏற்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

            


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,401 Views
7,873 Views
468 Views
3,667 Views
16 Views
34,808 Views
Top