Hirunews Logo
%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D..
Thursday, 21 June 2018 - 15:36
களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்..
51

Shares
4,145

Views

மட்டக்களப்பு - களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழாவின் இறுதிநாளான இன்று (21) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஆலய முன்றலில் அமையப் பெற்றுள்ள தீர்த்தக் குளத்தில் தீர்த்தோற்சவம் இடம் பெற்றது.

இதன்போது மூலமூர்ததியாகிய பிள்ளையார், சிவன் உடனுறை பார்வதி சமேதரரும், முருகன் வள்ளி, தெய்வானை சமேதராய் முத்துச் சப்பரத்தில் உள் வீதி, வெளி வீதி வலம் வந்து, பின்னர் தீர்த்தமாடினர்.

இதன்போது பக்தர்கள், முள்ளுக்காவடி எடுத்தும், பறவைக்காவடி எடுத்தும், கற்பூரச் சட்டி ஏந்தியும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர்.

கடந்த 12.06.2018 அன்று ஆரம்பமான இவ்வாலயத் திருவிழா இன்று வியாழக்கிழமை (21) நடைபெற்ற தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,178 Views
21,064 Views
3,083 Views
7,120 Views
806 Views
52,700 Views
Top