%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
Sunday, 21 April 2019 - 8:11
நோட்ரெ-டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீப்பரவல்
195

Shares
15,640

Views
இயேசு கிறிஸ்த்துவிற்கு அணியப்பட்டதாக நம்பப்படும் முள்முடி வைக்கப்பட்டுள்ள ஃபரான்ஸ் - பாரிஸ் நகரில் அமைந்துள்ள நோட்ரெ-டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில் உலக மக்கள் தமது கவலையை வெளியிட்டு வருகின்றன.

இந்த செய்திக்கு சர்வதேச ஊடகங்கள் முக்கிய இடம் வழங்கியுள்ளன.

இதேநேரம் இந்த தேவாலயத்தை மீள்கட்டமைப்பு செய்வதற்காக 6 ஆயிரம் கோடி ரூபாய்களை வழங்குவதற்கு உலகின் முன்னணி வர்த்தகர்கள் இருவர் முன்வந்துள்ளனர்.

இந்த நிதியில் 4 ஆயிரம் கோடி ரூபாவை உலகின் பிரபல ஃபேசன் நிறுவனமான லூவி வீட்டோவின் உரிமையாளர் பேர்னார்ட் ஆர்னோல்ட் வழங்குகிறார்.

அதேநேரம் உலகின் பிரபல கூச்சி ஃபேசன் வர்த்தக நாமத்தின் உரிமையாளர் ஃப்ரான்ஸுவா ஹென்றி பினோல்ட் 2 ஆயிரம் கோடி ரூபாய்களை வழங்கவுள்ளார்.

இது தவிர தீயினால் சேதமாகியுள்ள ஃப்ரானின் புகழ்பெற்ற நோட்ரே-டேம் தேவாலயத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு பலநூறு மில்லியன் யூரோக்கள் உதவி நிதியாக கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

17 மணித்தியாலங்களுக்கு முன்னர் ஏற்பட்ட தீப்பரவலில், 850 வருடங்கள் பழைமையான இந்த தேவாலயத்தின் கூரையும் கட்டிடத்தின் ஒருபகுதியும் சேதடைந்துள்ளது.

இதுதொடர்பில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்ட பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த தேவாலயத்தை மீண்டும் பழைய நிலைமைக்கே கொண்டுவருவதற்காக பலரும் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இதுதொடர்பாக விசாரிப்பதற்கு 50 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இது விபத்தாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எனினும் அங்கு இடம்பெற்று வந்த மீள்கட்டுமான பணிகளால் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,687 Views
47,024 Views
3,161 Views
56,579 Views
1,320 Views
106,305 Views
Top