%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+IPL+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+-+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87
Monday, 13 May 2019 - 10:58
இறுதி பந்தில் IPL கிண்ணத்தை வென்று கொடுத்த லசித் மாலிங்க - புகைப்பட தொகுப்பு உள்ளே
239

Shares
19,182

Views
நேற்று  இடம்பெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 2 ஓட்டங்களால் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாகவும் ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு 149 ஓட்டங்களைப் பெற்றது.

அதன்படி , 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 148 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற ஒரு ஓட்டத்தால் தோல்வியடைந்தது.

போட்டியின் இறுதி ஓவர் இலங்கை அணி வீரர் லசித் மாலிங்கவினால் வீசப்பட்ட நிலையில் , இறுதி பந்தில் இரண்டு ஒட்டங்கள் பெற வேண்டி இருந்தது.

இதன்போது , இறுதிப் பந்தில் லசித் மாலிங்க LBW முறையில் விக்கட்டொன்றை கைப்பற்றியதன் மூலம் மும்பை அணிக்கு வெற்றிக்கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

நேற்றைய போட்டி தொடர்பான புகைப்படத் தொகுப்பு கீழே...







 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
21,568 Views
46,887 Views
2,808 Views
56,296 Views
1,267 Views
106,024 Views
Top